காசா வரலாற்றில் மிகப்பெரிய இறுதி ஊர்வலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 112 பேரின் உடல்கள் நாளை அடக்கம்!

Date:

பாலஸ்தீனப் போராட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் சோகமான இறுதி ஊர்வலத்திற்கு நாளை காசா சாட்சியமாகவுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 112 பேரின் உடல்கள் நாளை ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளன.

காசாவின் குறிப்பிட்ட ஒரே பகுதியில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்டு, அடையாளம் தெரியாமல் காணாமல் போயிருந்த மொத்தம் 308 தியாகிகளில், ‘அபு ஷரியா’ (Abu Sharia) மற்றும் ‘அல்-ஹுசைனே’ (al-Husayneh) குடும்பங்களைச் சேர்ந்த 112 பேரின் உடல்கள் தற்போது இடிபாடுகளுக்கு இடையே இருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட இந்த 112 உடல்களும் நாளை முறைப்படி அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், இது காசாவின் வரலாற்றிலேயே நடத்தப்படும் மிகப்பெரிய மற்றும் மிகவும் நெகிழ்ச்சியான இறுதிச் சடங்காக அமையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள ஏனைய உடல்களையும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின்...

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து...

பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம்...