டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!

Date:

இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவ்பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, அகஸ்ட் மாதத்தில் பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை 6914 ஆகும்.

கம்பஹா மாவட்டத்தில் 19,671 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 18,289 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,635 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 6040 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் 5,964 பேரும், காலி மாவட்டத்தில் 5,063 பேரும், இரத்தினபுர மாவட்டத்தில் 4,946 பேரும் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய தரவு அறிக்கை காட்டுகிறது.

இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மன்னிப்பு கேட்ட முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌஷி

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌஷி அரச பத்திரிகை ஊடாக பொதுமன்னிப்பு அறிவித்தலை...

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தம் – மழை நீடிக்கும் சாத்தியம்

வங்காள விரிகுடாவின் வட அந்தமான் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் குறைந்த...

அமெரிக்க செனட் வேட்பாளர் அப்துல் அல்-சயீத் தனக்கு வைக்கப்பட்ட ‘பொறியை’ சாதகமாக மாற்றிய தருணம்.

எதிர்பாராத ஒரு திருப்பமாக, மிச்சிகன் மாநிலத்தில் அமெரிக்க செனட் சபைக்கான(Senate) ஜனநாயகக்...

கொழும்பில் காசநோய் பரவ அதிக மக்கள் தொகையே முக்கிய காரணம்: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தகவல்!

கொழும்பு நகரில் பல வருடங்களாகக் காசநோய் பரவுவதற்கு அங்குள்ள அதிக மக்கள்...