இலங்கை பைத்துல்மால் நிதியத்தினால் 2026 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக புலமைப்பரிசில்களுக்கான (Scholarships) விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டு வருகின்றன.
தகுதியுடைய பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்: ஸகாத் பெறத் தகுதியுள்ள வறுமைக்கோட்டிற்குட்பட்ட முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த மாணவராக இருத்தல் வேண்டும்.
2024 (2025) ஆம் ஆண்டு க.பொ.த (உயர் தர)ப் பரீட்சையில் தேர்ச்சி பெற்று, தப்போது இலங்கை அரசாங்க பல்கலைக்கழகம் ஒன்றில் முதலாம் ஆண்டில் கல்வி கற்பவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை & முக்கிய திகதி:
-
2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
-
கூகிள் படிவத்தின் https://forms.gle/TbQhmRosk1QnQhk58 வழியாக நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
-
கூகிள் விண்ணப்பப் படிவத்திற்கான லிங்க்கைப் பெற விரும்புவோர் c.baithulmal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குச் சிறிய கோரிக்கை ஒன்றை அனுப்பி பெற்றுக்கொள்ள முடியும்.
மேலதிக தொடர்புகளுக்கு; தொலைபேசி எண்கள்: 011 2599075 / 077 6211708.
