பல மாவட்டங்களில் இன்று அதிக வெப்பநிலை நிலவும்

Date:

நாட்டின் பல மாவட்டங்களில் இன்றைய தினம் (14) அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை உயர்வடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலேயே இந்நிலைமை எதிர்பார்க்கப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை காணப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, திறந்தவெளியில் தீவிர வேலைகளில் ஈடுபடுவதைக் குறைத்துக்கொள்ளுமாறும், தேவையான அளவு அதிகளவு நீர் அருந்துமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

 இலங்கை பைத்துல்மால் நிதியம்: பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் அறிவித்தல்!

இலங்கை பைத்துல்மால் நிதியத்தினால் 2026 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக புலமைப்பரிசில்களுக்கான (Scholarships)...

புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியில் தரம் 11 மாணவர்களுக்குப் பாராட்டு விழா!

புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியில், தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சையில்...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிவித்தல்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிடப்பட்ட முறையில் நடைபெறுமென பரீட்சைகள்...

நாட்டில் பல பகுதிகளில் 75 மி.மீ அதிக பலத்த மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...