53 ஆவது வருடத்தை பூர்த்தி செய்யும் இஸ்லாமிய கலாபீடம் ஜாமியா நளீமியா!

Date:

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சிக்கு கணசமான பங்களிப்பை வழங்கும் ஒரு நிறுவனமாக இருந்துவரும் பேருவளையில் அமைந்துள்ள ஜாமியா நளீமியா கலாபீடம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (ஆகஸ்ட் 19) 53 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

1973ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தன்று இக்கலாபீடம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்கள் பிரதம அதிதியாகவும், இந்தியாவின் டெல்லி மாநகரைச் சேர்ந்த மௌலானா இனாமூல் ஹஸன் அவர்களை சிறப்பு அதிதியாகவும் கொண்டு, ஜாமியா நளீமியாவின் ஸ்தாபகரும் நிறுவனத்தின் தலைவருமான அல்ஹாஜ் எம்.ஐ.எம். நளீம் அவர்களின் பங்களிப்போடு அன்றைய தினத்தில் இக்கலாபீடம் திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு விழா நிகழ்ச்சிக்காக அன்று தயாரிக்கப்பட்ட அழைப்பிதழ் இச்செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பலாந்தை முஸ்லிம்களின் வரலாற்றைப் பேசும் “பலன்புர முஸ்லிம்கள்” நூல் வெளியீடு செப்டம்பரில்

களுத்துறை மாவட்டம், அகலவத்தை தேர்தல் தொகுதிக்குட்பட்ட வரலாற்று  சிறப்புமிக்க பலாந்தை பிரதேச...

செப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது சாரதிகளும் பயணிகளும் சீட் பெல்ட் அணிவது ஏற்கனவே...

இஸ்ரேலிய அமைச்சர் இடாமர் பென் க்வீர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்: அமெரிக்க செனட்டர் ஜாக்கி ரோசன் வலியுறுத்தல்

காசாவில் தினமும் இரவு பல பாலஸ்தீனர்களை இஸ்ரேலியப் படைகள் கொல்ல வேண்டும்...

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் இன்று (19) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டின்...