முஸ்லிம் காங்கிரஸின் எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா.

Date:

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள நிலையில், பத்தாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் பதவியொன்றில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ். அப்துல் வாஹித் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தமை தொடர்பில் சமர்ப்பித்த கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

அப்துல் வாஹித்தின் இராஜினாமா 2026 செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஏற்பட்டுள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்கவுள்ளது.

Popular

More like this
Related

சவூதி நீதிமன்றின் தீர்மானத்தை வரவேற்ற ஜனாதிபதி!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவுக்கு எதிரான மரண...

இலங்கையில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் HIV தொற்றாளர்கள்!

இலங்கையில் HIV தொற்றாளர்கள் மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களின் எண்ணிக்கை...

சிறை விதிகளில் திருத்தம்; இடைக்கால அறிக்கை கையளிப்பு!

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள சட்ட விதிகள் மற்றும்...

மெல்போர்னில் கலாநிதி யாசிர் காதியின் “நடுநிலையான சமூகம்” இஸ்லாமிய மாநாடு வெற்றிகரமாக நிறைவு!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், பிரபல இஸ்லாமிய அறிஞர் ஷேக் கலாநிதி யாசிர்...