இந்த ஆண்டில் இதுவர 97,637 டெங்கு நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 74 பேர் உயிரிழந்துள்ளதாக அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், செப்டம்பர் மாதத்தின் முதல் 13 நாட்களில் 2,146 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
பதிவான மொத்த டெங்கு பாதிப்புகளின் அடிப்படையில், கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 20,742 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
மேலும், கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ள மாவட்டங்களில் அடங்கும்.
இம்மாவட்டங்களில் முறையே 19,235, 7,291 மற்றும் 6,247 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
