சவூதியின் தமாம் சர்வதேச விமான நிலையத்திற்கான பயணங்கள் தற்காலிகமாக ரத்து

Date:

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு மற்றும் சவூதி அரேபியாவின் தம்மாம் நகருக்கு இடையே இன்று (12) மற்றும் நாளை (13) இயக்கப்படவிருந்த விமான சேவைகளை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் கொழும்பு மற்றும் தம்மாம் சர்வதேச விமான நிலையத்திற்கு இடையே இயக்கப்படவிருந்த UL253 மற்றும் UL254 ஆகிய விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ரியாத் நகருக்கான விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏற்கனவே அடுத்த வாரம் வரை ரத்து செய்துள்ளது.

சவூதி அரேபியாவிற்கான அடுத்தடுத்த விமான சேவைகள் குறித்த அறிவிப்புகள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (11) நடத்தப்பட்ட புதிய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், சுமார் 11 பேர் காயமடைந்ததாக சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

யேமனின் ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் ஒரு நாள் கழித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சிறைவாசம் அனுபவிக்கும் பௌத்த பிக்குகளின் காவி உடை தொடர்பில் நிக்காயக்களே தீர்மானிக்க வேண்டும்: அமைச்சர் நலிந்த

பல்வேறு குற்றச் செயல்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் தொடர்ந்து  (காவி...

2027 ஆண்டிலும் பாடசாலை மாணவர்களுக்கான ரூ. 6,000 கொடுப்பனவு

2027 ஆம் கல்வியாண்டிற்காக 15 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்குத் தலா 6,000...

ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

அஸ்வெசும (Aswesuma) நலத்திட்ட உதவிகளுக்கான 2.04 பில்லியன் ரூபாயை, தகுதியுள்ள பயனாளிகளின்...