கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

Date:

காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கல்பிட்டி, கொழும்பு மற்றும் காலி ஊடாக நீடிக்கும் குறித்த கடற்பரப்புகளுக்காக இந்த எச்சரிக்கை இன்று (21) அதிகாலை 4.15 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், முற்பகல் 10.15 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தண்ணீரை ஆயுதமாக்கும் முயற்சி? சிந்து நதி நீரை நிறுத்தினால் போர்க் குற்றமாகுமா? – ஒரு விரிவான ஆய்வு.

 -எழுதியவர்: ஹஸன் அப்பாஸ் (நீரியல் மற்றும் நீர் வளங்கள் சார்ந்த வல்லுநர்) சிந்து...

ரூபாய் 100 லஞ்சம் பெற்ற  போக்குவரத்து அதிகார சபையின் நேர அட்டவணை அதிகாரி கைது!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் போக்குவரத்து அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரத்தோலுகமவில் இருந்து...

திலீபன் சிலை விவகாரம் தொடர்பில் அரசியல்வாதிகள் உட்பட 14 பேரிடம் வாக்குமூலம்!

யாழ்ப்பாணம் நல்லூரில் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் திலீபன் என...

அமைதியான இராஜதந்திரம், தேசத்தின் நிம்மதி: அனோஜன் சிவராசா வழக்கில் தூதுவர் அமீர் அஜ்வத்தின் மகத்தான பங்களிப்பு

மத நிந்தனை குற்றச்சாட்டின் பெயரில் சவூதி அரேபிய சட்டத்தின் பிரகாரம் இலங்கையைச்...