Thursday, November 19, 2026

தமிழ்நாடு தமுமுகவினர் நடத்திய மாபெரும் கண்டன பேரணி!

1 min read · 10 reads

28 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் முஸ்லிம் 22 ஆயுள் கைதிகளை விடுதலை செய்யவும் பிற்படுத்தப்பட்ட (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) சமூகங்களிலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கும் 3.5 வீத பிற்படுத்தப்பட்ட (MBC) இடஒதுக்கீட்டு சலுகை கிடைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (17) சென்றை அண்ணாசாலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் (தமுமுக) நடத்திய மாபெரும் பேரணியில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் இப்பேரணி நடந்தமை குறிப்பிடத்தக்கது.

(படங்கள்)

 

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.