முடிவில்லா தொடரும் பாலியல் துஷ்பிரயோகங்கள்: 11 வயது சிறுவனைத் துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை
மதகுருவாக மாற்றுவதாகக் கூறி விகாரையில் தங்கவைத்து 11 வயது சிறுவன் ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், எத்பிட்டியே சந்திரானந்த தேரருக்கு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 14 ஆண்டுகால சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக குறித்த தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.