நியூயார்க் மாநில செனட் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் Primary (உள் கட்சி) தேர்தலில், பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண்ணான அபெர் கவாஸ் (Aber Qawas) வரலாற்றுச் சாதனை வெற்றியைப் பெற்றுள்ளார்.
குயின்ஸ் பகுதியில் உள்ள 12-வது தொகுதிக்கான இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், நியூயார்க் நகர மேயர் ஸோஹ்ரான் மம்தானியின் முழு ஆதரவோடு களம் இறங்கிய அபீர் கவாஸ், நியூயார்க் மாநில வரலாற்றிலேயே செனட் தொகுதிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் பாலஸ்தீன முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
நியூயார்க்கில் பிறந்து வளர்ந்த அபீர் கவாஸ், ஒரு முற்போக்கு மற்றும் ஜனநாயக சோசலிச (Progressive and Democratic Socialist) ஆர்வலராகத் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
வாழ்க்கைச் செலவு உயர்வு, மலிவு விலை வீட்டு வசதி , வாடகைதாரர்களின் பாதுகாப்பு, குடியேறிகளின் , உரிமைகள் மற்றும் பொதுச் சேவைகளை மேம்படுத்துதல் போன்ற மக்கள் நலச் சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்து இவர் களம் இறங்கினார்.
காசாவில் நடக்கும் தாக்குதல்களுக்கு எதிராகத் தனது பிரச்சாரத்தில் குரல் கொடுத்தார். இஸ்ரேலுக்கு வழங்கப்படும் நிதியுதவிகளை நிறுத்தக் கோரியதுடன், நியூயார்க் மேயர் சஹ்ரான் மம்தானியுடன் இணைந்து “எங்கள் பணத்தில் இல்லை!” என்ற பிரச்சாரத்தையும் தொடங்கினார்.
ஜனநாயகக் கட்சியை ஒரு சோசலிச சக்தியாக மாற்ற முயலும் மேயர் மம்தானியின் தீவிர முயற்சிகளுக்குக் கிடைத்த மற்றுமொரு பெரிய வெற்றியாக அபீர் கவாஸின் இந்த வெற்றி பார்க்கப்படுகிறது.
அபீர் கவாஸ் அடுத்ததாக, வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் (General Election) நேரடியாகக் களம் காண உள்ளார்.
