இரட்டை நிலநடுக்கத்தால் வெனிசுவேலாவில் அவசர நிலை பிரகடனம்: உதவ அமெரிக்கா தயார் என டிரம்ப் அறிவிப்பு

Date:

வெனிசுவேலாவில் வெறும் 40 நொடிகள் இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 என்ற ரிக்டர் அளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த தொடர் நிலநடுக்கங்களால் நாட்டின் பல பகுதிகளில் வலுவான நில அதிர்வு உணரப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

குறிப்பாக தலைநகர் கராகஸில் நிலநடுக்கங்களின் தீவிரம் அதீதமாக இருந்தது. பல கட்டடங்கள் இடிந்து விழுந்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இடிபாடுகளால் நகரம் முழுவதும் புழுதிப் படலம் சூழ்ந்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 10,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் அச்சம் தெரிவித்துள்ளது. இதனிடையே வெனிசுலாவில் நாடு முழுவதும் பேரிடர்கால அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது,

வெனிசுவேலாவை தாக்கிய இரண்டு மாபெரும் நிலநடுக்கங்களும் பெரிய அளவில் மக்களை பாத்திதுள்ளது. மேலும் அதிக அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்கா உதவத் தயாராகவும், விருப்பத்துடனும், திறனுடனும் இருக்கிறது. நமது அரசாங்கத்தின் அனைத்து முகமைகளும் விரைவாகச் செயல்படத் தயாராக இருக்குமாறு நான் அறிவுறுத்தியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார...

கடற்பிரதேசங்களில் பலத்த காற்று

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில்...

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்!

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்...