பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் !

Date:

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை’ பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

துறைசார் அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை இணங்கியுள்ளது. நடைமுறையிலுள்ள சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஆரம்ப வரைவொன்றைத் தயாரிப்பதற்குத் தொழில்நுட்ப நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

குறித்த ஆரம்ப வரைவின் அடிப்படையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு 2026 ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த சட்டமூலத்திற்கு தற்போது சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.இச்சட்டமூலம் விரைவில் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதுடன், அதன்பின்னர் ஒப்புதலுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

22வது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் !

தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தால் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பின்...

ஒரு அரசை உருவாக்குவதில் இலங்கையின் நிறைவேறாத பணி

–ரிசா யெஹியா சிரேஷ்ட கட்டிடக் கலைஞர். நாட்டிற்கு வெறும் நல்ல அரசாங்கம் மட்டும் தேவையில்லை....

விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை!

தற்போது வழங்கப்படும் அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, அடுத்த சில...

“ஒற்றுமையும் சரியான சிந்தனையும் சமூக எழுச்சியின் அடித்தளம்”:ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய தலைவர் அஷ்ரப் ஜமால்தீன் உரை  

“நற்கருமங்களிலும் பொதுநலப் பணிகளிலும் பரஸ்பரம் ஒத்துழைத்து, விட்டுக்கொடுத்து, உற்சாகத்துடன் இணைந்து செயல்படும்...