புனித மக்கா நகரில் இடம்பெற்ற இலங்கைத் தொழிலதிபரின் மகன் திருமணம்; சவூதி விருந்தோம்பலுடன் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வு

Date:

இலங்கையின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான அல்ஹாஜ் ஃபஸ்லுல் ஜிஃப்ரி, (Alhaj Fazlul Jiffry), தனது மகனான அஹ்மத் ஃபாதெலின் (Ahmed Fadel) திருமண விழாவை புனித மக்கா நகரத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடியுள்ளார்.

அஹ்மத் ஃபாதெலின் திருமண விழா, உலக முஸ்லிம்களின் புனிதத் தலமான மக்கா நகரில் சவூதி அரேபிய பாரம்பரிய விருந்தோம்பலுடன் இனிதே நடைபெற்றது.
இப்புனித நிகழ்வில் இலங்கையிலிருந்து வருகை தந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) தலைவர் அஷ்ஷைக் ரிஸ்வி முஃப்தி, அரசியல் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா (MP)
மற்றும் சமூகப் பெரியார்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மற்றும் இலங்கையின் முன்னணி வர்த்தகப் பிரமுகர்கள், சமூகத் தலைவர்கள் எனப் பலர் இந்நிகழ்வில் சிறப்பித்தனர்.
புனித மக்கா நகரில் அமைந்திருந்த சிறப்பு மண்டபத்தில், சவூதி அரேபியாவின் உயரிய பண்பாட்டு விருந்தோம்பலுடன் உபசரிக்கப்பட்டனர்.
புனித பூமியில் நடைபெற்ற இந்தத் திருமண விழா, இலங்கையிலிருந்து சென்றிருந்த விருந்தினர்கள் மற்றும் உள்ளூர் முக்கிய பிரமுகர்களுக்கு மறக்க முடியாத ஒரு ஆன்மீக மற்றும் மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது.
மணமக்களின் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமையப் பலரும் தமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் துஆக்களையும் தெரிவித்தனர்.

Source- alarabiya

Previous article
Next article

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தண்ணீரை ஆயுதமாக்கும் முயற்சி? சிந்து நதி நீரை நிறுத்தினால் போர்க் குற்றமாகுமா? – ஒரு விரிவான ஆய்வு.

 -எழுதியவர்: ஹஸன் அப்பாஸ் (நீரியல் மற்றும் நீர் வளங்கள் சார்ந்த வல்லுநர்) சிந்து...

ரூபாய் 100 லஞ்சம் பெற்ற  போக்குவரத்து அதிகார சபையின் நேர அட்டவணை அதிகாரி கைது!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் போக்குவரத்து அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரத்தோலுகமவில் இருந்து...

திலீபன் சிலை விவகாரம் தொடர்பில் அரசியல்வாதிகள் உட்பட 14 பேரிடம் வாக்குமூலம்!

யாழ்ப்பாணம் நல்லூரில் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் திலீபன் என...

அமைதியான இராஜதந்திரம், தேசத்தின் நிம்மதி: அனோஜன் சிவராசா வழக்கில் தூதுவர் அமீர் அஜ்வத்தின் மகத்தான பங்களிப்பு

மத நிந்தனை குற்றச்சாட்டின் பெயரில் சவூதி அரேபிய சட்டத்தின் பிரகாரம் இலங்கையைச்...