காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்பிட்டி, கொழும்பு மற்றும் காலி ஊடாக நீடிக்கும் குறித்த கடற்பரப்புகளுக்காக இந்த எச்சரிக்கை இன்று (21) அதிகாலை 4.15 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், முற்பகல் 10.15 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
