அஷ்ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின் ‘அல்-ரபீஃ’ நபி புகழ் கவிதை நூல் வெளியீடு இன்று மாலை.

Date:

சிந்தனையாளர், ஆய்வாளர், இலக்கியவாதி, கவிஞர், எழுத்தாளர், வளவாளர் மற்றும் பன்னூல் ஆசிரியருமான அல்-உஸ்தாத் அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் ஹழ்ரத் அவர்களின் “அல்-ரபீஃ” எனும் நபி புகழ் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று [21] புதன்கிழமை, மாலை 03:45 மணி முதல் 06:00 மணி வரை கொழும்பு 10, டி.ஆர். விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையகத்தின் 2-ஆம் மாடி கேட்போர் கூடத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவிற்கு இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளரும், ‘மீடியா லிங்க்’ தவிசாளருமான அல்-ஹாஜ் எம்.எச்.எம். நியாஸ் அவர்கள் தலைமை தாங்குகிறார்.

ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியான கௌரவ நீதியரசர் அல்-ஹாஜ் அஹ்ஸன் மரிக்கார் LLM (Col) பிரதம அதிதியாகக் கலந்துகொள்கிறார்.

விழாவில் கௌரவ அதிதியாகக் கலந்துகொள்ளும் கிழக்குப் பல்கலைக்கழக அரபுப் பிரிவின் முன்னாள் தலைவரும், இந்நாள் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்-ஷைக் அல்-ஹாபில் ஐ.எம். தாலிப் PhD (R), B.A. Hons. (SEUSL), M.A. (NUM Malaysia) நூலாசிரியர் அறிமுக உரையை ஆற்றவுள்ளார்.

 அறிஞரும் கவிஞருமான அஷ்-ஷைக் எம்.பி.எம். ஹிஷாம் (பத்தாஹி) (ஆசிரியர் – குல்லிய்யத் மதீனத் அல்-இல்ம், தலைவர் – கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழு) ‘அல்-ரபீஃ’ நூல் குறித்த திறனாய்வு உரையை வழங்கவுள்ளார்.

இவ்விழாவில் இலக்கியவாதிகள், அறிஞர்கள், சமூகப் பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தண்ணீரை ஆயுதமாக்கும் முயற்சி? சிந்து நதி நீரை நிறுத்தினால் போர்க் குற்றமாகுமா? – ஒரு விரிவான ஆய்வு.

 -எழுதியவர்: ஹஸன் அப்பாஸ் (நீரியல் மற்றும் நீர் வளங்கள் சார்ந்த வல்லுநர்) சிந்து...

ரூபாய் 100 லஞ்சம் பெற்ற  போக்குவரத்து அதிகார சபையின் நேர அட்டவணை அதிகாரி கைது!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் போக்குவரத்து அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரத்தோலுகமவில் இருந்து...

திலீபன் சிலை விவகாரம் தொடர்பில் அரசியல்வாதிகள் உட்பட 14 பேரிடம் வாக்குமூலம்!

யாழ்ப்பாணம் நல்லூரில் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் திலீபன் என...

அமைதியான இராஜதந்திரம், தேசத்தின் நிம்மதி: அனோஜன் சிவராசா வழக்கில் தூதுவர் அமீர் அஜ்வத்தின் மகத்தான பங்களிப்பு

மத நிந்தனை குற்றச்சாட்டின் பெயரில் சவூதி அரேபிய சட்டத்தின் பிரகாரம் இலங்கையைச்...