நைஜரில் பாடசாலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் 20 மாணவர்கள் உடல் கருகி பலி

Date:

நைஜர் நாட்டின் தலைநகரில் உள்ள பாடசாலையொன்றில் திடீரென பற்றிய தீ விபத்தில் 20 மாணவர்கள் உடல் கருகி பலியாகினர். இவ்வாறு உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர்.

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு சில வகுப்பறைகள் பள்ளி கட்டடத்துக்குள்ளும், சில வகுப்பறைகள் பள்ளிக்கு வெளியே வைக்கோலால் செய்யப்பட்ட குடிசைகளிலும் நடந்து வந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இங்கு வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் பள்ளிக் கூடத்தில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ பள்ளி முழுவதும் பரவியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ நாலாபுறமும் சூழ்ந்ததால் மாணவர்கள் பலர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பொத்துவில் பாடசாலைக்கு பாகிஸ்தான் தூதுவர் விஜயம்: மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டொக்டர் நய்யார் நசீர்...

கனமழையால் 35 இடங்களில் நிலச்சரிவு : 6 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’!

நாட்டில் நிலவும் பலத்த மழைவீழ்ச்சி காரணமாக இதுவரை சுமார் 35 சிறிய...

முஸ்லிம் காங்கிரஸின் புதிய தேசியப் பட்டியல் எம்.பி.யாக ஹபீப் றிபான் நியமனம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஓட்டமாவடியைச்...

ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவின் ‘அம்புலுவாவ: ஆதிக்கத்தை வென்ற சுயாதீனம்’ நூல் வெளியீடு செப்டம்பர் 23 இல்!

"அம்புலுவாவ: ஆதிக்கத்தை வென்ற சுயாதீனம்" (අම්බුළුවාව - පර ආධිපත්‍යය පැරදවූ...