செய்திகளில் குறிப்பிட்டது போல தனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை -இன்சமாமுல் ஹக் வெளிப்படை பேச்சு!

Date:

செய்திகளில் குறிப்பிட்டது போல தனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித் தலைவர் இன்சமாமுல் ஹக் தெரிவித்துள்ளார்.

இன்சமாமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கடந்த ஒரிரு தினங்களாக செய்திகள் வெளியாகின. இதனை இன்சமாமுல் ஹக் மறுத்துள்ளார்.இது  தொடர்பாக தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோவொன்றை பதிவிட்டு தெரிவித்துள்ளார்.எனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான செய்திகளை நான் அவதானித்தேன்‌.எனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவரைச் சென்று பார்த்தேன்.எனக்கு ஆஞ்சியோகிராபி பரிசோதனை செய்ய வேண்டும் எனச் சொன்னார்கள்.அப்போது ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.அடைப்பை நீக்க ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.இந்தச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.12 மணி நேரமே அனுமதிக்கப்பட்டேன்.

தற்போது நான் வீட்டில் நலமாக உள்ளேன்.அசெளகரியமாக உணர்ந்ததால் உடனடியாக மருத்துவரைச் சென்று சந்தித்தேன்.இதயத்துக்கு அருகில் அல்ல , வயிற்றுப் பகுதியில் மருத்துவப் பரிசோதனையை நான் தாமதப்படுத்தியிருந்தால் என் இதயம் பாதிக்கப்பட்டிருக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/5j2i1zh_Qeg

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

கொழும்பில் நாளை இடம்பெறவுள்ள ‘அல் அகீதா அஸ் – ஸஹீஹா’ நூல் வெளியீட்டு மாநாடு!

இலங்கையிலுள்ள பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவரான அல்-ஆலிம் சி.ஐ.எம். அஸ்மீர்...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து...

இன்று நடைபெறுகின்ற புத்தளம் பெரிய பள்ளிவாசல் தர்ம கர்த்தா சபை நியமனம் தொடர்பில் முறைப்பாடு

(குறிப்பு: புத்தளம் பெரிய பள்ளிவாசலுடைய நிர்வாக சபை தெரிவு இன்று மாலையில்...

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்: பொலிஸார் எச்சரிக்கை!

அதிவேகம் மற்றும் கவனயீனமாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து...