பிரதமர் தலைமையில் மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு விழா

Date:

மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு வெற்றி விழா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (01) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீமத் அனகாரிக தர்மபாலவின் தாயாரான மல்லிகா ஹேவாவிதாரன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய மல்லிகா இல்லச் சங்கம் 1920ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிவாரணம் அளிப்பதே இதன் நோக்காகும்.

மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மல்லிகா ஹேவாவிதாரன அவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இதன்போது நினைவு முத்திரையொன்றும் முதல் நாள் உறையும் வெளியிடப்பட்டது. வெகுசன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும அவர்களினால் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமரின் பாரியாரிடம் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மல்லிகா இல்லச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஐவருக்கு பிரதமரினால் நூற்றாண்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ, கௌரவ அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், முன்னாள் சபாநாயகர் தேசபந்து கரு ஜயசூரிய, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, மல்லிகா இல்லச் சங்கத்தின் தலைவர் தமயந்தி டி அல்விஸ் பெர்னாண்டோ உள்ளிட்ட மல்லிகா இல்லச் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...