ACJU மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு!

Date:

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத்தின் தூதுக் குழு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைமையகத்திற்கு நேற்று (06) சிநேகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது.

இச் சந்திப்பின் போது ஜம்இய்யாவின் அறிமுகம் அவர்களுக்கு வழங்கப்பட்டதோடு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு இடையில் இருக்கும் ஒத்துழைப்பு பற்றியும் இந் நாட்டில் சகவாழ்வை கட்டியெழுப்புவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இதில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொஹிதீன், திருச்சி மாவட்ட அரச காழி மவ்லவி ஜலீல் சுல்தான் உட்பட அதன் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். ஜம்இய்யா சார்பில் கௌரவத் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதன்போது ஜம்இய்யாவின் வெளியீடுகளும் அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தகவல்: அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஊடகப் பிரிவு.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...