பாகிஸ்தானின் சியல்கோட்டில் பிரியந்த குமாரவை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றும் இந்த நயவஞ்சகமான செயலை கண்டித்து பாகிஸ்தான் செனட் சபை ஒரு மனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
இந்த பிரேரணையை அவைத்தலைவர் ஷாசாத் வாசிம் முன்மொழிந்தார்.இந்தத் தாக்குதலினால் பாகிஸ்தானின் நற்பெயருக்கு மட்டுமின்றி இஸ்லாத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.