ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் இன்று!

Date:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் இன்று (28) ஆரம்பமாகவுள்ளது.ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட் தலைமையில் ஜெனீவா தலைமையகத்தில் ஆரம்பமாகும் இந்த கூட்டத் தொடர் ஏப்ரல் 1ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 49 ஆவது அமர்வில், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் நாட்டுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் வெளிவிவகார செயலாளர் கடந்த 25 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் விளக்கமளித்தார்.

பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த நிறுவனங்கள் இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு ஒரு வகையிலும் சக்தி வாய்ந்த நாட்டிற்கு மற்றொரு வகையிலும் செயற்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், பாரதூரமான மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் சக்தி வாய்ந்த நாடுகள் தொடர்பில் அந்த நிறுவனங்கள் கவனம் செலுத்துவதில்லை எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு இலங்கை கட்டுப்பட்டு செயற்படுவதாக பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இதன் போது தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் குற்றச்சாட்டுகள் ஒரு சமூகத்தையோ அல்லது அரசியல் கட்சியையோ மாத்திரமல்ல முழு நாட்டையும் பாதிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை நிறுத்துவதற்கு சிலர் முன்வந்துள்ளதாக சுட்டிக்கட்டியுள்ள அவர், GSP+ சலுகையின் இழப்பு அரசாங்கத்தையும் நாட்டின் பல துறைகளையும் பாதிக்கும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மன்னிப்பு கேட்ட முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌஷி

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌஷி அரச பத்திரிகை ஊடாக பொதுமன்னிப்பு அறிவித்தலை...

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தம் – மழை நீடிக்கும் சாத்தியம்

வங்காள விரிகுடாவின் வட அந்தமான் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் குறைந்த...

அமெரிக்க செனட் வேட்பாளர் அப்துல் அல்-சயீத் தனக்கு வைக்கப்பட்ட ‘பொறியை’ சாதகமாக மாற்றிய தருணம்.

எதிர்பாராத ஒரு திருப்பமாக, மிச்சிகன் மாநிலத்தில் அமெரிக்க செனட் சபைக்கான(Senate) ஜனநாயகக்...

கொழும்பில் காசநோய் பரவ அதிக மக்கள் தொகையே முக்கிய காரணம்: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தகவல்!

கொழும்பு நகரில் பல வருடங்களாகக் காசநோய் பரவுவதற்கு அங்குள்ள அதிக மக்கள்...