வரட்சியான காலநிலை: காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் தாழிறங்கியுள்ளது!

Date:

மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினையடுத்து காசல்ரி நீர்த்தேக்கத்தில் வரலாறு காணாத அளவு நீர் மட்டம் தாழிறங்கியுள்ளது. இதனால் நீரில் மூழ்கி கிடந்த பல கட்டடங்களின் அடையாளங்கள், ஆலயங்கள், தீவுகள் ஆகியன தோற்றம் பெற்றுள்ளன. குறித்த நீர்த்தேக்கத்தில் நேற்றைய தினம் வரை 12.4 வீத நீர் மாத்திரமே எஞ்சியிருப்பதாக மின்சாரதுறை பொறியியலாளர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக வரட்சியான காலநிலை நிலவுவதனால் இந்நீர்த்தேகத்தில் நீர் மட்டம் மேலும் குறைவடையலாம் எனவும் நீரினை மிகவும் கவனமாக பயன்படுத்துமாறும் மின்சாரதுறை பொறியியலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிகவெகுவாக குறைவடைந்துள்ளதன் காரணமாக தற்போது மின் துண்டிப்பு இடம்பெற்று வருகின்றன. கடந்த காலங்களில் ஐந்து தொடக்கம் ஆறு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் எரிபொருள் மற்றும் நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள வரட்சி நிலை காரணமாக 10 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

இதே நேரம் மலையகத்தில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினையடுத்து நீர் ஓடைகள், நீரூற்றுக்கள் ஆகியனவும் வற்றிப்போய் உள்ளன இதனால் தற்போது பல பிரதேசங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நிலவிவரும் வரட்சியான காலநிலையினையடுத்து மவுசாகலை நீர்த்தேக்கத்தில் 29.7 சதவீதம் மாத்திரம் எஞ்சியிருப்பதாகவும், கொத்மலை நீர்த்தேகத்தில் 21.5 சதவீதமும், விக்டோரியா நீர்த்தேகத்தில் 33.2 சதவீதமும், ரந்தனிகலை நீர்த்தேக்கத்தில் 56.1 சதவீதமும் சமனலவென 14.6 சதவீத நீர் மாத்திரமே எஞ்சியிருப்பதாகவும் தற்போது அதிகமான நீர்த்தேக்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

இதே நேரம் நீரில் மூழ்கி கிடந்த குடியிருப்புக்கள் கட்டடங்கள், வீதிகள், தொழிற்சாலைகள், தீவுகள் ஆகியன தோற்றம் பெற்றுள்ளதனால் உள்நாட்டு வெளிநாட்டு பிரதேசவாசிகள் சென்று புகைப்படம் எடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஃபேஸ்புக்கில் AI போலி வீடியோக்கள்: பிரதமரின் வீடியோக்கள் 12 ,லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதால் அதிர்ச்சி!

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய CEO நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்த விபுல்...

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதில் மதத் தலைவர்களின் பங்கு: ஜெத்தாவில் சர்வதேச கருத்தரங்கம் தொடக்கம்!

ஜெத்தாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) தலைமையகத்தில், "பெண்களுக்கு எதிரான...

அஸ்வெசும நிதி மோசடி: 6 ஆசிரியர்கள், மாவட்ட செயலக அதிகாரி பணிநீக்கம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2 கோடி ரூபாய்க்கும் அதிக அஸ்வெசும...