இலங்கை பங்களாதேஷிடம் கடன் கோரிக்கை: முதலாவது கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய காலம் நீட்டிப்பு

Date:

பங்களாதேஷிடம் இருந்து மேலதிக நிதியுதவிக்கான கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஊடகங்களிடம் பேசிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, நாணய மாற்றமாக மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கோரியுள்ளது.

இது முன்னைய பங்களாதேஷ் வழங்கிய 250 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் கூடுதலாகும். அதேநேரம் முந்தைய கடனை திருப்பிச் செலுத்தும் காலம் பங்களாதேஷ் வங்கியால் நீட்டிக்கப்பட்டதாக நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கை மற்றொரு கடனுக்கான சமீபத்திய கோரிக்கை தற்போது பரிசீலனையில் உள்ளது என்று பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் அப்துல் மொமன் மேலும் கூறினார்.

மேலும் பங்களாதேஷ் நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் கூறிய அவர், நிலைமை எவ்வாறு உருவாகும் என்பதையும் அவர்கள் மதிப்பீடு செய்து வருவதாகவும், நிலைமையைப் பொறுத்து இலங்கையின் கோரிக்கை குறித்து முடிவெடுக்கும் என்றும் கூறினார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...