நீர்கொழும்பு பாத்திமா ஷஹ்தா விண்வெளி உயர் பாடநெறிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்!!

Date:

நீர்கொழும்பைச் சேர்ந்த பாத்திமா ஷஹ்தா என்பவர் விண்வெளி உயர் பாடநெறிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் நீர்கொழும்பு வீதி இஹல கொட்டராமுல்லை ஹாரூன் ஸஹீக்கா தம்பதிகளின் புதல்வியாவார். அதுமட்டுமில்லாமல் ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர் றிழ்வான் ஹாஜியின் பேத்தியும் ஆவார்.

டுபாய் நாட்டில் வளர்ந்த பாத்திமா ஷஹ்தா கல்விப் பொதுத்தராதர உயர் தரத்தை நீர்கொழும்பு செய்லான் இன்டர்நெஷனல் கல்லூரியில்  நிறைவு செய்துள்ளார்..

அதேநேரம்,விண்ணியல் துறைகளில் தொடர்பான உயர் கற்கை நெறிகளை பூர்த்தி செய்து மேலதிக கற்கை நெறிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய டுபாய் நாட்டுக்கு சென்ற பாத்திமா ஸஹ்தா அங்கிருந்து உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

விண்வெளி வீரர்களாக/ வீராங்கனைகளாக வர விரும்புவோர் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் AERONAUTICS AND ASTRONAUTICS கற்கை நெறிக்கு விண்ணப்பித்தால் அது தொடர்பில் இலகுவாக அட்மிஷன் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தப் பல்கலைக்கழகம் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்ததும் ஆப்பிரகாம் லிங்கனின் மசோதா ஒன்றின் வழியாக ஆரம்பிக்கப்பட்டதுமான ஒரு பல்கலைக்கழகமாகும்.

அதே நேரம் விண்வெளித்துறை பாடநெறியின் ஆரம்பத்தில் இருந்தே மாணவர்களைக் கவருவதற்காக பல்கலைக்கழக நிர்வாகம் நாசாவின் சின்னம் பொறித்த சீருடையை வழங்கி மாணவர்களையும் அவர்களின் பெற்றோரையும் கவர்ந்து கொள்வதுடன், அதை ஒரு ஊக்குவிப்பு செயற்பாடாகவும் முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...