ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு பயணம்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு பயணம் செய்துள்ளார்.

காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (17) அதிகாலை 3.15 மணியளவில் ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு பயணம் செய்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு வரும் 19ம் திகதி நடைபெறவுள்ளது.

இறுதி சடங்கில் கலந்து கொண்ட பின்னர் ஜனாதிபதி எதிர்வரும் 20 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் பல மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோதலில் சிறைச்சாலைகள் இருந்த பல...

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

நீர்கொழும்பு சிறை மோதல்: விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...

தேர்தல் சட்ட மறுஆய்வு: அனைத்துத் தரப்பினரும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க அகில இலங்கை முஸ்லிம் லீக் இளைஞர் முன்னணிகள் சங்கம் வேண்டுகோள்!

இலங்கையின் எதிர்காலத் தேர்தல் முறைமை மற்றும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை...