புத்தளம்- தப்போவ இராணுவ முகாமின் கஜபா படையணியின் 14 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மதஸ்தலங்களில் பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த வகையில், நேற்று முன்தினம் இராணுவ படையணியின் கொமாண்டர் தினேஷ் ஜயவர்த்தன உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து, நாட்டின் நலன் கருதியும், தொடர்ந்தும் நாட்டுக்கு சேவை செய்யவும் விசேட தேவையுடைய இராணுவ அதிகாரிகளுக்காகவும் விசேட பிரார்த்தனைகளில் பங்கு கொண்டனர்.
இதன்போது, பள்ளிவாசலின் உப தலைவர் அல்ஹாஜ் ஏ.எம்.எம்.பசால், ஜாமியத்துல் உலமா புத்தளம் கிளை உப தலைவர் அஷ்ஷைஹ்.முஹம்மத் அசீம் ஆகியோர் இந்நிகழ்வில் பள்ளிவாசல் சார்பாக கலந்து கொண்டனர்.