இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

நாட்டில் இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ரிட்ஜ்வே  சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை நிலைமை காரணமாக சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சா பரவல்  அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இருமல், வாந்தி, காய்ச்சல் உள்ளிட்ட சில நோய் அறிகுறிகளுக்கமைய சிறுவர்களை பரிசோதனை செய்து பார்த்ததில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த வைரஸ் மீண்டும் சமூகத்தில் பரவ ஆரம்பித்துள்ளது. ஆகவே குழந்தைகள் சிறுவர்களை பாடசாலை, பாலர் பாடசாலைகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளவும் தொற்றுபரவாமல் இருக்கவும் பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

முக கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இன்புளுவன்சா வைரஸிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...