ஜனவரி மாதம் முதல் மின் பட்டியல் இணையத்தின் ஊடாக..!

Date:

மின்சார சபையின் புதிய கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சருக்கும் மின்சார சபை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின் பட்டியல் மற்றும் பற்றுச் சீட்டுகளை இணையத்தின் ஊடாக மட்டுமே வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பிரச்சினைகள் மற்றும் மின்சார சபையின் செலவினங்களைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த புதிய கட்டிட நிர்மாண பணி 2021 ஆம் ஆண்டு ஆரம்பமாகியது.

Popular

More like this
Related

ஜனாதிபதி மாளிகை குத்தகைக்கு: அமைச்சரவை அனுமதி

அரசுக்கு சொந்தமான மாளிகைகள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாக...

இலங்கை தமிழ் இளைஞருக்கு சவூதியில் சிறைத்தண்டனை விவகாரம்: விரிசல்களை வளரவிடாது இன நல்லிணக்கத்தை பாதுகாப்பது முக்கியம்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு,...

மெக்குவாரி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஷெமாரா விக்ரமநாயக்க ஓய்வு

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான 'மெக்குவாரி குரூப்' (Macquarie Group)...

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...