30 ரூபாவுக்கு முட்டை?: ‘கேக் விலை குறையும், பாண் விலை குறையாது’

Date:

பேக்கரி தொழில் துறையினருக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்று 30 ரூபாவுக்கு வழங்கப்படுமாயின் கேக்கின் விலையை குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்த முடியும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் பாண் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது எனவும்

தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் கேக் 1200 ரூபா முதல் 1,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றை 30 ரூபாவுக்கு தொழில் துறையினருக்கு வழங்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே பேக்கரி உரிமையாளர் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, உள்நாட்டு முட்டைகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளமையினால் இந்தியாவில் இருந்து 20 இலட்சம் முட்டைகள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...