நாடளாவிய ரீதியில் நாளை (15) சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று (14) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மக்களின் தேவைகளை கணிக்காமல், அரசாங்கத்தின் இருப்பை பாதுகாக்க பல செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. எனவே மக்களுக்கு ஆதரவாக அதாவது எங்களது கோரிக்கைகளை முன்வைத்தே இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் அரசாங்க அடக்குமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் ஜனநாயக ஆட்சிக்காக நாளை (15 ) நாடு முழுதும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அதே அடக்குமுறை செயற்பாடு தற்போது இங்கும் நடைபெறுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.