துருக்கிய உளவுத்துறை நடவடிக்கையில் புதிய ஐ.எஸ் தலைவர் கொல்லப்பட்டார்

Date:

சிரியாவில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது ஐ. எஸ் அமைப்பின் தலைவர் அபு ஹுசைன் அல் குராஷி கொல்லப்பட்டுள்ளதாக  துருக்கி ஜனாதிபதி  தையிப் எர்டோகன் அறிவித்துள்ளார்.

இந்த வார இறுதியில் துருக்கியப் படைகளால் சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அல்-குராஷி “கொல்லப்பட்டார்” என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தார்.

துருக்கி எல்லையில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில், டிரேஸ் அருகே உள்ள கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை துருக்கியப் படைகள் சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியவில் தாக்கியதாக உள்ளூர் பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

துருக்கியப் படைகள் அந்த பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் போராளிகளுடன் மோதியதுடன், சரணடைய மறுத்த அல்-குராஷியைச் சுற்றி வளைத்தனர்.

பின்னர் அல்-குராஷி தனது உடலில் கட்டியிருந்த வெடிமருந்துகளை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகின்றது.

அல்-குராஷி நவம்பரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் நான்காவது தலைவராக தெரிவானார்.

அப்போது அந்த அமைப்பு முன்னாள் தலைவரின் மரணத்தை அறிவித்திருந்ததுடன், புகைப்படங்கள் எதுவும் வெளியாகி இருக்கவில்லை.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் நிறுவனர் அபுபக்கர் அல் பாக்தாதி 2019ஆம் ஆண்டு அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார்.

இதனிடையே, இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்கா வடக்கு சிரியாவில் ஒரு ஹெலிகாப்டர் தாக்குதலை நடத்தியது.

இதன்போது ஐஎஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் உட்பட குறைந்தது மூன்று போராளிகளைக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...