இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மோசமான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் வேளையில் எப்படியாவது ஐ.எம்.எப் கொடுக்கும் 6.7 பில்லியன் டாலர் நிதியுதவியை பெற்றிட வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையில் இந்தியாவுடன் எல்லை-யை பகிர்ந்துக்கொள்ளும் சீனா செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் நாடுடன் சுமார் 40000 கோடி ரூபாய் மதிப்பிலான 1200 மெகாவாட் அணுமின் நிலையத்தை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
பாகிஸ்தான் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் வேளையில் சீனா கண்களை மூடிக்கொண்டு பாகிஸ்தான் நாட்டின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை சற்றும் யோசிக்காமல் தனது கடன் வலையில் ஏற்கனவே சிக்கிய பாகிஸ்தானுக்கு கூடுதலாக கடன் கொடுத்துள்ளது.
சீனா ரூ.40000 கோடியில் புதிய அணுமின் நிலையத்தை பாகிஸ்தானில் அமைப்பது மூலம் பாகிஸ்தான் நாட்டின் நெருங்கிய தோழமை நாடாக மாறியுள்ளது சீனா.
இதுக்குறித்து பாகிஸ்தான் அதிபர் ஷெபாஸ் ஷெரீப் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார்.
இந்த பேட்டியில் புதிய அணுமின் நிலையத்தை அமைக்க சீனா நேஷ்னல் நியூகிளியர் கார்ப்ரேஷன் மற்றும் பாகிஸ்தான் ஆட்டாமிக் எனர்ஜி கமிஷன் ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த மாபெரும் திட்டத்திற்கு பெயர் Chashma 5, இது பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாகாணத்தில் அமைய உள்ளது. புதிய அணுமின் நிலையம் மூலம் பாகிஸ்தான் தொடர்ந்து கச்சா எண்ணெய் சார்ந்து இருக்கும் நிலை மாறும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் நாட்டின் 6வது அணுமின் நிலையம் திறக்கப்பட்டது மூலம் பாகிஸ்தானின் மொத்த அணுசக்தி உற்பத்தி திறன் 1,400 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது.
சீன அரசு தனது பிரபலமான Belt and Road Initiative திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் நாட்டின் உள்கட்டமைபை மேம்படுத்த சுமார் 65 பில்லியன் டாலர் வரையிலான தொகையை முதலீடு செய்வதாக ஏற்கனவே அறிவித்தது.
இந்த 4.8 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய அணுமின் நிலையம் BRI திட்டத்திற்குள் வருகிறதா அல்லது தனியாக சீனா முதலீடு செய்கிறதா என்பது தெரியவில்லை.