புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு 5.4 பில்லியன் டொலர்கள் வருமானம்

Date:

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் முதல் 11 மாதங்களில் 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர்.

இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2023 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர் என்று இலங்கை மத்திய வங்கி  வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, தொழிலாளர்கள் கடந்த நவம்பரில் 537.3 மில்லியன் டொலர்களை அனுப்பியுள்ளனர். இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட 384.4 மில்லியன் டொலர்கள் வருவாயைவிட 40 சதவீதம் அதிகமாகும்.

2022 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் தொழிலாளர்கள் 3.3 பில்லியன் டொலர்களை அனுப்பியிருந்தனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் நிதியானது இலங்கைக்கான வெளிநாட்டு வருமானத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும்.

2023ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதிவரை 275,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...