நாட்டில் சட்டம் ஒன்று உள்ளதை தற்போது புரிந்திருப்பார்: ஹிருணிகாவினால் கடத்தப்பட்ட இளைஞர் தகவல்!

Date:

தெமட்டகொடையில் கடையொன்றில் பணிபுரிந்து வந்த இளைஞரை கடத்திச் சென்று சட்டவிரோதமாகத் தடுத்து வைத்த குற்றச்சாட்டில் ஹிருணிகாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்திருந்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி அமில பிரியங்கர என்ற இளைஞர் கடத்திச்செல்லப்பட்டு குடும்பத்தகராறைத் தீர்க்கும் முயற்சியில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவினால் கடத்தப்பட்டதாக கூறப்படும் அமில பிரியங்கர இது தொடர்பில் கூறுகையில்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தனது நாடாளுமன்ற அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியுள்ளதாக தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில் சட்டம் ஒன்று உள்ளது என்பதை ஹிருணிகா பிரேமச்சந்திர இப்போது புரிந்து கொள்வார். “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆனால் நீதிமன்ற வழக்கு ஒன்பது ஆண்டுகளாக இழுத்துச் செல்லப்பட்டது.

அந்த நேரத்தில் என்னால் சுதந்திரமாக வேலை செய்ய முடியவில்லை. நான் நான்கு முறை வேலையை மாற்ற வேண்டியிருந்தது. நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஓரளவு இழப்பீடு வழங்கப்பட்டிருந்தால், அது எனக்கு ஓரளவு நிவாரணமாக இருந்திருக்கும்.

இச்சம்பவத்தினால் தனது மகன் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்தாலும், தவறு செய்வதற்கு முன், நாட்டில் சட்டம் உள்ளது என்பதை மக்களுக்கு நினைவூட்ட, இந்த தீர்ப்பு ஒரு சிறந்த உதாரணம்.

“இந்தப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க ஹிருணிகாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் தனக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இறுதியாக தண்டிக்கப்பட்டார். நாட்டின் சட்டம் நடைமுறையில் உள்ளது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை  ஹிருணிகா பிரேமச்சந்திர, தனக்கு விதிக்கப்பட்டுள்ள 3 வருட சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னை பிணையில் விடுவிக்குமாறு ஹிருணிகா பிரேமச்சந்திர கொழும்பு மேல் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இது தொடர்பான கோரிக்கை எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...