சம்பந்தனின் இறுதி கிரியைகள்: திருகோணமலையில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

Date:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தனின் இறுதி கிரியைக்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க ,பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்கவுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதி கிரியைகள் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் இன்று(07) மாலை இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதுடன் பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

அரசியல் பிரமுகர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள், என பலரும் திருகோணமலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

 

இறுதி கிரியைக்காக ரணில் விக்ரமசிங்க, பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்கவுள்ள நிலையில் பலத்த பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு திருகோணமலை நகர் முழுதும் ஆழ்ந்தல் இரங்கல் தெரிவித்து இரா. சம்ந்தனின் உருவப்படம் பொறித்து தொங்கவிடப்பட்டுள்ளது.

 

 

இதில் தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், வடகிழக்கு மலையகத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் என பலரும் மேலும் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...