உச்ச கட்டத்தை தொடும் இஸ்ரேல் – பலஸ்தீனப் போர்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,265 ஆக உயர்வு

Date:

இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் 10 மாதங்களுக்கும் அதிகமாக நடைபெற்று வருகின்றது.

இப் போரில் அனேகமான பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் லட்சக்கணக்கானோர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இப் போரை நிறுத்தும்படி உலக நாடுகள் வலியுறுத்தி வருவதோடு, இதற்கான நிபந்தனை அறிக்கையையும் அமெரிக்கா தயாரித்தது.

ஆனாலும் நிபந்தனைகளுக்கு இரு தரப்பினரும் இணங்குவதாக தெரியவில்லை. இன்று வரையில் போர் முடிவுக்கு வரவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, டேயிர் அல் – பாலா, கான் யூனிஸ் ஆகிய நகரங்களில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த நள்ளிரவு முதல் அங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி கடந்த 10 மாதமாக நடைபெற்று வரும் போரில் காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,265 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 93,144பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...