இஸ்ரேலின் பென் குரியன் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன!

Date:

இஸ்ரேலின் டெல் அவிவ் அருகே உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

அங்குள்ள அவசரகால நிலை காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை லெபனான் தலைநகர் பேய்ரூட் உட்பட அந்நாட்டின் தென் பகுதியை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லாஹ் அமைப்பிற்கு ஒத்துழைப்புகளை வழங்கி வரும் தளங்களை இலக்கு வைத்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

பேய்ரூட்டின் தஹியா மாவட்டத்தில் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதி ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த இடமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் தலைமையில், இலங்கை போக்குவரத்து...

கொழும்பில் ‘முஸ்லிம் நட்பு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் விழிப்புணர்வு கருத்தரங்கு 2026’ !

மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் சுற்றுலாத்...

உழ்ஹிய்யா கடமை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முக்கிய வழிகாட்டல்

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, இஸ்லாத்தின் முக்கிய சுன்னத்தான உழ்ஹிய்யா (குர்பானி)  நிறைவேற்றுவது...

ஆண்டுதோறும் 15,000 க்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்!

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 15,000 முதல் 18,000 வரையிலான புதிய புற்றுநோயாளிகள்...