புத்தளத்தின் தமிழ் மொழி மூல முதலாவது முன்பள்ளி IFMஇன் விளையாட்டு விழா:பாராளுமன்ற உறுப்பினர் பைசல் உள்ளிட்ட பல பிரமுகர்கள் பங்கேற்பு

Date:

  • எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகரில் தமிழ் மொழி மூலம் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட ஐ.எப்.எம். முன்பள்ளியின் 52 வது ஆண்டு நிறைவு மற்றும் வருடாந்த “டைனி டொட்ஸ்” இல்ல விளையாட்டு போட்டிகள் கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஐ.எப்.எம் முன்பள்ளியின் பொறுப்பாசிரியை எம்.எஸ்.பௌசுல் ரூஸி தலைமையில் மிக விமரிசையாக இடம்பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம் பைசல் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், இந்த முன்பள்ளியின் பழைய மாணவர்களான அரசியல் பிரபலங்கள், கல்வியியலாளர்கள், சமூக ஆர்வலர்கள்,சமூக அபிவிருத்தி அதிகாரி, முன் பிள்ளை பருவ அபிவிருத்தி அதிகாரி உள்ளிட்ட நகர சபையின் அதிகாரிகள், சமய தலைவர்கள், புத்தி ஜீவிகள், புத்தளத்தில் உள்ள ஏனைய முன்பள்ளிகளின் ஆசிரியைகள், அரச அதிகாரிகள், தொழிலதிபர்கள், உலமாக்கள், வர்த்தகர்கள், சங்கத் தலைவர்கள், நலன்விரும்பிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை விசேட அம்சமாகும்.

“நாம் இல்லையேல் நாளை என்பதும் இல்லை” என்பது இந்த வருட விளையாட்டு போட்டியின் தொனிப் பொருளுக்கு அமைய இவ் இல்ல விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன.

இதில் “மா” மற்றும் “பலா” ஆகிய இரண்டு இல்லங்களை சேர்ந்த 25 மழலை சிறார்கள் தமது திறமைகளை வெளிகாட்டினர். அதன்படி
50 மீட்டர் ஓட்டம், பழம் சேகரித்தல், பலூன் உடைத்தல், பூ கோர்த்தல், போத்தலில் நீர் நிறைத்தல், சாக்கு ஓட்டம், கால் கட்டி ஓட்டம், சீருடை அணிதல் உள்ளிட்ட பல போட்டிகள் இடம்பெற்றன.

போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடம் பெற்ற பிள்ளைகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதோடு நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பிள்ளைகளுக்கும் பெறுமதியான பரிசு, வெற்றிக் கிண்ணம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

இல்ல அலங்கரிப்பு போட்டி, 03 ம் தரத்துக்கு உட்பட்ட ஐ.எப்.எம்.பழைய மாணவ மற்றும் மாணவிகளுக்கான போட்டி, பெற்றோர் மற்றும் அதிதிகளுக்கான போட்டிகளும் இடம்பெற்றன.

இவ் இல்ல விளையாட்டு போட்டியில் இல்ல அலங்கரிப்புக்கான முதலாம் இடத்தை பலா இல்லம் பெற்று அலங்கார கேக்கை பரிசாக பெற்றதுடன். போட்டிகளின் முடிவில் இவ்வாண்டின் சம்பியனாக மா இல்லம் தெரிவு செய்யப்பட்டு அதற்கான வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது .

பிரபல விளையாட்டு துறை நடுவர்களான எம்.ஓ.எம்.ஜாக்கிர், எம்.எஸ்.எம்.ஜிப்ரி தலைமையிலான நடுவர் குழாம் போட்டிகளில் நடுவர்களாக பங்கேற்றனர்.

புத்தளம் நகரில் தமிழ் மொழி மூல முன்பள்ளிகள் எதுவுமே இல்லாத ஒரு கால கட்டத்தில் 1972 ம் ஆண்டு இந்த ஐ.எப்.எம். முன்பள்ளி புத்தளத்தில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டதுடன் புத்தளம் நகரில் பல உயர் பதவிகளை வகிக்கின்ற பலரை உருவாக்கிய பெருமையோடு இன்றும் சேவையாற்றி கொண்டிருப்பதானது இதன் வரலாற்று சாதனையாகும்.

 

 

 

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...