சில பகுதிகளில் அவசர நீர் வெட்டு தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சார சபைக்குச் சொந்தமான அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நாளை மறுதினம் (27) காலை 08.30 மணி – மாலை 5.00 மணி வரை 8 ½ மணிநேரம் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.