ஈரானில் கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதிலாக புதிய தளபதிகள் நியமனம்!

Date:

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் இராணுவப்படைகளின் தளபதிகளுக்கு பதிலாக, புதிய தளபதிகளை நியமித்து அந்நாட்டு உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி உத்தரவிட்டுள்ளார்.

ஆபரேஷன் ரைஸிங் லயன் என்ற பெயரில் ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள இராணுவ தளவாடங்கள், அணுசக்தி நிலையங்கள், இராணுவ அலுவலகங்கள் உள்ளிட்டவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்தத் தாக்குதலில், ஈரானின் முப்படை தலைமைத் தளபதி ஜெனரல். முஹம்மது பகேரி, இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தளபதி ஜெனரல்  ஹொசைன் சலாமி உள்ளிட்ட முக்கிய இராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதிலாக புதிய தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானின் முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல். அப்தொல்ரஹிம் மௌசவி என்பவரும், இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைவராக முஹம்மது பக்போர் என்பவரையும் அந்நாட்டு உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி நியமித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களுக்கு ஈரான் எப்போது வேண்டுமானாலும் பதிலடி கொடுக்கக் கூடும் எனும் சூழல் நிலவி வருவதால், இஸ்ரேல் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...