செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் விரட்டியடிப்பு

Date:

யாழ். செம்மணியில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டிய “அணையா விளக்கு“ இறுதி நாள் போராட்டத்தில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

செம்மணியில் போராட்டக்களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் விரட்டியடிக்கபட்டனர்.

மதியம் 1 மணியளவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் மற்றும் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் செம்மணி போராட்ட திடலுக்கு சென்றனர்.

இதன் பொழுது போராட்டகாரர்களால் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் போத்தல்களால் எறியப்பட்டு விரட்டியடிக்கபட்டார்.

இதேவேளை அவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.  விரைவாக குறித்த இடத்தை விட்டு சந்திரசேகரன் வெளியேறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி காத்திருந்த நிலையில் அவரையும் சூழ்ந்து கொண்டோர் அவரையும் விரட்டியடித்தனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...