பெண்கள், சிறுவர்கள் குறித்த தகவல்களை அறிவிக்க கட்டணமற்ற 2 தொலைபேசிகள் இலக்கங்கள் அறிமுகம்

Date:

அனர்த்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான எந்தவொரு தகவலையும் உடனடியாக தெரிவித்துக் கொள்ள இரண்டு கட்டணமில்லா தொலைபேசி சேவைகள் தற்போது 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுடன் இணைந்துள்ள தேசிய மகளிர் சபையின் 1938 பெண்கள் உதவி அவசர தொலைபேசி இலக்கம்  மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 சிறுவர் உதவி அவசர தொலைபேசி இலக்கங்கள் மூன்று மொழிகளில் இலவசமாக செயல்படுகின்றன.

  • பெண்கள் தொடர்பான தகவல்களுக்கு – 1938
  • சிறுவர்கள் தொடர்பான தகவல்களுக்கு – 1929

இந்த இரண்டு சேவைகளுக்கும் கட்டணம் இன்றியே, 24 மணி நேரமும் அழைத்து தகவல் பகிர முடியும்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு, நலன், அவசர உதவி மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இவ்விரு ஹாட்லைன்களும் முக்கிய பங்கு வகிப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

‘குர்ஆனின் வழியில் கருணை காட்டுங்கள்’; அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக அலி சப்ரி குரல்

நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரது கருணை,...

இரட்டையையாளர்களான மருத்துவத் துறை மாணிவிகள் இருவருக்கு ஐபேட் வழங்கி வைப்பு.

உலக முஸ்லிம் சமேலனம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) – இலங்கை அலுவலகத்தின்...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்கான தீவிர முயற்சி!

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை...

அனோஜன் வழக்கை உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை அரசு!

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன்...