உள்ளூர்

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் காணிப்பிரச்சினைகள் அடங்கிய ஆவணம் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரிடம் ஒப்படைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மட் சாத் கத்தாக் அவர்கள் நேற்று (2021.07.01) பொத்துவிலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். குறித்த விஜயத்தையொட்டி...

உயர்கல்விக்கு வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கான கொவிட் தடுப்பூசி செலுத்தும் விசேட வேலைத்திட்டம்

உயர் கல்வியை தொடர வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் தேவையுள்ள மாணவர்கள் இன்று(02)...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மீளாய்வு செய்வது தொடர்பான வெளிநாட்டு அமைச்சின்  ஊடக வெளியீடு

ஐரோப்பிய ஒன்றியத்துடனான வழக்கமான ஈடுபாடு மற்றும் உரையாடலின் ஒரு பகுதியாக, நல்லிணக்கத்தின் குறிப்பிட்ட துறைகளிலான முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, தற்போதுள்ள சட்டங்கள், கடந்தகால நடைமுறைகள் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்தல் உட்பட 1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து, ஜூன் 25ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் முன்னுரிமையை மீளாய்வு செய்வதற்காகவும், ஒரு அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்காகவும், அமைச்சரவை துணைக்குழுவுக்கு உதவும் முகமாக அமைச்சரவை துணைக்குழு மற்றும் அதிகாரிகள் குழுவை நியமிப்பதற்காகவும் ஜூன் 21ஆந் திகதி அமைச்சரவை எடுத்த தீர்மானம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்த நோக்கத்திற்காக, நீதித்துறை, பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், பொது பாதுகாப்பு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைஞர் திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் தேசிய புலனாய்வு தலைமை அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதிநிதிளுடன் ஜூன் 24ஆந் திகதி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற மற்றும் தண்டனை அனுபவித்த பதினாறு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர்களுக்கு, அரசியலமைப்பின் 34வது பிரிவின் படி ஜூன் 24ஆந் திகதி ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பு குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மேலும் தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், நீண்ட காலமாக நீதித்துறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிக்கப்பட்டது. தற்போதைய நல்லிணக்க வழிமுறைகளில் முன்னேற்றம் குறித்து தெரிவிக்கையில், 1,230 இழப்பீட்டு உரிமைக்கோரல்களைத் தீர்ப்பதற்காக, ஜூன் மாதத்தில் ரூபா. 79 மில்லியன் தொகையை இழப்பீட்டு அலுவலகத்திற்கு விடுவித்தமையை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளது. 3,389...

இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலுக்கு

இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் கம்பஹா மாவட்டம்- பியகம பொலிஸ்...

தென்னிந்திய பெருங்கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

தென்னிந்திய பெருங்கடலில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக தற்போது இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடலோரப் பகுதிகள் பாதுகாப்பான பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது, சற்று நேரத்திற்கு முன்பு லங்கா...

Popular