இலங்கையில் இதுவரை 3,244,417 பேருக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது

Date:

இலங்கையில் இதுவரை 3,244,417 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றைய தினத்தில் (06) மாத்திரம் 140,041 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 15,365 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 384,294 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை 114,795 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் 14,428 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...

இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்ககூடும்!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழைவீழ்ச்சி...

ஜனாதிபதி மாளிகை குத்தகைக்கு: அமைச்சரவை அனுமதி

அரசுக்கு சொந்தமான மாளிகைகள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாக...

இலங்கை தமிழ் இளைஞருக்கு சவூதியில் சிறைத்தண்டனை விவகாரம்: விரிசல்களை வளரவிடாது இன நல்லிணக்கத்தை பாதுகாப்பது முக்கியம்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு,...