பிரேஸிலின் பெற்றோபொலிஸ் நகரில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் இதுவரையில் பலியானவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளதோடு 200 இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகால நிவாரண பணிகளுக்காக பிரேசில் அரசாங்கத்தினால் பெருமளவான நிதி வழங்கப்பட்டுள்ளது.