பேக்கரி பொருட்கள் மற்றும், உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு!

Date:

கோதுமை மாவின் விலை அதிகரிப்பினையடுத்து பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய பாண் ஒன்றின் விலை 20-30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு பன் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று முன்னதாக, செரண்டிப் நிறுவனமும், பிரீமாவும் தங்கள் கோதுமை விலைகளை உயர்த்துவதாக அறிவித்தன.

1 கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவாலும் பிரீமா நிறுவனம் அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கொத்து ரொட்டியின் விலையை 10 முதல் 15 ரூபாவினால் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலை சடுதியாக அதிகரித்தன் காரணமாக, இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...