மாவனெல்லையில் போதைப் பொருள் பாவனைக்கெதிரான விழிப்பூட்டல் நிகழ்வு!

Date:

போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை, மாவனல்லை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வு நேற்று முன்தினம் ஜமாஅத் வளாகத்தில் இடம்பெற்றதுடன் நிழ்வில் பிரதம அதிதியாக கேகாலை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவிற்கு பொறுப்பான அருட்தந்தை எஸ்.சி தொடவத்தை கலந்து கொண்டார்.

இதனிடையே, மாவனல்லை பொலிஸ் நிலைய சமூக பிரிவிற்கு பொறுப்பான ஆர்.எம். ரத்னாயக்க, மாவனல்லை பொலிஸ் நிலைய சமூக தொடர்பாடல் பிரதானி டி.எம்.எம்.சி. தஸனாயக்க, ரன்கொன்திவல கிராம சேவகர் ஏ.எஸ்.கே.அமரஸிங்க ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

மேலும் இந்த நிகழ்வில் போதைப் பொருள் பாவனை மற்றும் அதன் தீமைகள் பற்றின விழிப்புணர்வு உரையினை தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் செயற்திட்ட அதிகாரி எம்.எச்.எம் ஹசன் நிகழ்த்தினார்.

இதேவேளை போதைப் பொருள் பாவனைக்கெதிராக விழிப்பூட்டலுக்காக வாகனங்கள் மற்றும் கடைகளில் ஒட்டுவதற்காக 1000 ஸ்டிக்கர்ஸ் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளையினால் கையளிக்கப்பட்டது.

Popular

More like this
Related

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...

மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய...

இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம்!

வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது,...