அமைச்சரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக பெண் கைது!

Date:

மகாராஷ்டிர சமூக நீதித்துறை அமைச்சா் தனஞ்சய் முண்டேயை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்க முயன்றதாக ஒரு பெண்ணை பொலிஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இதுதொடா்பாக மும்பை மலபாா் ஹில் காவல் நிலையத்தில் அமைச்சா் தனஞ்சய் முண்டே புகாா் அளித்திருந்தாா். அதில், ரேணு சா்மா (40) என்ற பெண் தன்னிடம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், பணத்தைக் கொடுக்க தவறினால் தன் மீது பாலியல் வன்கொடுமை புகாா் அளிப்பதாக அச்சுறுத்துவதாகவும் அமைச்சா் தெரிவித்திருந்தாா்.

இதன்பேரில் மும்பை குற்றப் பிரிவு பொலிஸாா் விசாரணை மேற்கொண்டு, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்த ரேணு சா்மாவை புதன்கிழமை கைது செய்தனா். பின்னா், அவரை உள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நீதிபதியின் அனுமதியின்பேரில் மும்பை அழைத்து வந்தனா்.

இதுகுறித்து பொலிஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தனஞ்சய் முண்டேயிடம் அந்தப் பெண் ரூ.5 கோடி ரொக்கம், ரூ.5 கோடி மதிப்பில் வணிக வளாகம், கைப்பேசி உள்ளிட்ட விலை உயா்ந்த பொருள்களைக் கேட்டிருக்கிறாா். இல்லையெனில் அவா் மீது பாலியல் வன்கொடுமை புகாா் அளித்து அவரது நற்பெயரைக் கெடுத்துவிடுவேன் என மிரட்டியுள்ளாா். அதன்படி, தனஞ்சய் முண்டே ஆரம்பத்தில் ரூ.3 லட்சத்தையும், ரூ.1.42 லட்சம் மதிப்பிலான கைப்பேசியையும் வேறொரு நபா் வாயிலாக அந்தப் பெண்ணிடம் வழங்கியுள்ளாா். தொடா்ந்து ரேணு சா்மா அமைச்சரிடம் பணம் கேட்டு மிரட்டியதால், அவா் பொலிஸாரை அணுகினாா்’ என்றனா்.

கடந்த ஆண்டில் அமைச்சா் தனஞ்சய் முண்டேயின் இரண்டாவது மனைவிதான் ரேணு சா்மா என கருணா சா்மா என்பவா் குற்றம்சாட்டியிருந்தாா். அந்த கருணா சா்மாவின் சகோதரிதான் ரேணு சா்மா என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சா் பேட்டி: இதனிடையே, பீட் மாவட்டத்தில் அமைச்சா் தனஞ்சய் முண்டே செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘சுமாா் 2 ஆண்டுகளாக அந்தப் பெண் எனக்கு தொல்லை கொடுத்தாா். இதற்கு முன்பும் அவா் என் மீது பொலிஸில் புகாா் அளித்து பின்னா் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டாா். அவரது தொல்லையை சகிக்க முடியாமல்தான் தற்போது பொலிஸில் புகாா் அளித்தேன். புகாா் மனுவுடன் என்னிடம் இருந்த அனைத்து ஆதாரங்களையும் சமா்ப்பித்துள்ளேன். இனி சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்றாா்

Popular

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...

ஆளும் கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஷூரா சபை சந்திப்பு

ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பின் பேரில், தேசிய...